தமிழின் முதல் வேளாண் நாளிதழ்... தின வேளாண்மை...

கோபியில் பட்டுக்கூடு வளர்ப்பு 20 சதம் சரிவு

பட்டு நூல் இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, பட்டுக் கூடு விலை குறைந்துள்ளது. இதனால், கோபி பகுதியில் பட்டுக்கூடு வளர்ப்பு 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் 4,700 ஏக்கரில் மல்பெரி பயிரிட்டுள்ளனர். மாதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 1,800 ஏக்கரில் 930 விவசாயிகள் மல்பெரி பயிரிட்டுள்ளனர். மாதம் 56 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கிலோ பட்டுக்கூடு உற்பத்தியாகிறது.



இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக் கூடுகள் கர்நாடகாவில் ராம்நகர், தமிழகத்தில் கோவை, தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.நடப்பாண்டு பட்டுக் கூடு உற்பத்தி துவங்கிய நிலையில் திடீரென விலை சரிவடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளர். சென்றாண்டு நவம்பர் மாதம் முதல் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வரை மஞ்சள் கூடு ஒரு கிலோ 300 ரூபாய், வெள்ளைப் பட்டுக் கூடு 400 ரூபாய், பட்டு நூல் ஒரு கிலோ 2,600 ரூபாய் வரை விலைபோனது.

ஏப்ரல் மாதத்துக்கு பிறகு பட்டுக் கூடு விலை திடீரென சரிந்தது.நேற்றைய நிலவரப்படி தர்மபுரி மார்கெட்டில் வெள்ளைக்கூடு ஒரு கிலோ 190. 50 ரூபாய், மஞ்சள் கூடுக்கு 165.50 ரூபாய் 201 ரூபாய்,கோவை மார்கெட்டில் மஞ்சள் கூடு 160 ரூபாய், வெள்ளை கூடு 260 ரூபாய், கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலில் மஞ்சள் கூடு 120 முதல் 238 ரூபாய் , வெள்ளை கூடு 188 முதல் 315 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கோபி பட்டு வளர்ப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மல்பெரி செடியில் மாவு பூச்சி தாக்கியதால் பட்டு கூடு வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

பப்பாளி, மரவள்ளி போன்ற செடிகளுக்கு மருந்து தெளித்து மாவு பூச்சி கட்டுபடுத்தப்பட்டது. மல்பெரி செடிக்கு மருந்து அடித்தால் பட்டுப் புழுக்கள் செத்து விடும். மல்பெரி செடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. சென்ற ஆண்டு மஞ்சள் விலை ஓரளவுக்கு நன்றாக இருந்ததால் பட்டு கூடு வளர்ப்பில் இருந்து மஞ்சளுக்கு பல விவசாயிகள் மாறினர்.இறக்குமதி செய்யப்பட்ட பட்டு நூலுக்கு 25 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டது.சில மாதங்களுக்கு முன் இந்த வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டதால், சீனா நூலை நெசவாளர்கள் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

இதன் காரணமாக பட்டுக் கூடு விலை திடீரென சரியத் துவங்கியுள்ளது. பட்டுக்கூடுக்கு சரியான விலை கிடைக்காததால் 20 சதவீதத்துக்கு மேல் பட்டுக் கூடு உற்பத்தி குறைந்து விட்டது.சென்ற நவம்பர் முதல் ஏப்ரல் வரை மஞ்சள் கூடு 300 ரூபாய், வெள்ளக்கூடு 400 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஏப்ரலுக்கு பிறகு வெண் கூடு 280 ரூபாய், மஞ்சள் கூடு 160 ரூபாய் வரை விற்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...