ஏப்ரல் மாதத்துக்கு பிறகு பட்டுக் கூடு விலை திடீரென சரிந்தது.நேற்றைய நிலவரப்படி தர்மபுரி மார்கெட்டில் வெள்ளைக்கூடு ஒரு கிலோ 190. 50 ரூபாய், மஞ்சள் கூடுக்கு 165.50 ரூபாய் 201 ரூபாய்,கோவை மார்கெட்டில் மஞ்சள் கூடு 160 ரூபாய், வெள்ளை கூடு 260 ரூபாய், கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலில் மஞ்சள் கூடு 120 முதல் 238 ரூபாய் , வெள்ளை கூடு 188 முதல் 315 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கோபி பட்டு வளர்ப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மல்பெரி செடியில் மாவு பூச்சி தாக்கியதால் பட்டு கூடு வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து இயக்கத்தின் மாநில தலைவர் வேலாயுதம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைகளின் படி தோட்டக்கலை பயிர்களான மா, பலா மற்றும் காய்கறிகள் ஆகியவை பணப்பயிர்களாக கருதப்பட்டு இலவச மின்சாரம் வழங்க இயலாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விதிமுறையை அமல்படுத்தும் வகையில், திருச்சி மாவட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயி ஒருவருக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளனர். ச
மீபத்தில் தோட்டக்கலை பயிர்களில் தென்னையும் சேர்க்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை என்ற விதிமுறை பின்பற்றப்பட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வேளாண்துறை அமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், விவசாயிகளிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எனவே அரசு மின்வாரியத்தின் மூலம் தென்னை உட்பட பயிர்களுக்கு இலவச மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லாபுரம் பகுதியில் 250 எக்டரிலும், மடத்துக்குளம் பகுதியில் 2,500 எக்டரிலும் ஆண்டு முழுவதும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என்ற மூன்று சீசன்களில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது, குறுவை சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கி தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை குறைவு மற்றும் அமராவதி அணையில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடியில் நடவு பணிகள் தாமதமானது.
கடந்தாண்டு அமராவதி பாசனப்பகுதி விவசாயிகள் தேவைக்காக வேளாண்துறை சார்பில் கணியூரில் நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள உலர்களத்தில் ஒரே நாள் மட்டும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பெயரளவிற்கு கொள்முதல் மையம் துவங்கப்பட்டு மூடுவிழா நடத்தப்பட்டது. தற்போது மையம் காணாமல் போயுள்ள நிலையில் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
குறுவை சாகுபடியில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளது. அறுவடை சீசன்களில் கல்லாபுரம் உட்பட அமராவதி பாசனப்பகுதி கிராமங்களை இடைதரகர்கள் முற்றுகையிடுகின்றனர். விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வெளிசந்தைகளில் அதிக விலைக்கு நெல் விற்கப்படுகிறது. உடுமலை பகுதியில் அரசு கொள்முதல் மையம் எதுவும் இல்லாத நிலையில், விவசாயிகள் இடைதரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்கின்றனர்.
தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சாகுபடி செலவு அதிகரித்து, நோய் தாக்குதலால் குறுவை சீசனில் விளைச்சல் குறைந்துள்ளது. இந்நிலையில், செயற்கையாக விலை சரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் அடுத்த சீசனில் நெல் சாகுபடியை கைவிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து கல்லாபுரம் பகுதி விவசாயிகள் கூறுகையில், அமராவதி பாசனப்பகுதிகளில் கொள்முதல் மையம் அமைக்க அரசு முன்வரவேண்டும். நிரந்தர மையங்களை அமைத்து தேவையான உலர்களங்கள், இருப்பு வைக்க குடோன்கள் கட்டி தர வேண்டும். இது குறித்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை என்றனர்.
பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்துக்கும், கிணற்று பாசனத்துக்கும் சின்ன வெங்காயம் பயிரிடப்பட உள்ளது. சாகுபடியில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, விதை தேர்வில் கவனம் செலுத்த விதை சான்று தெரிவித்துள்ளது.விதை ஆய்வு துறை துணை இயக்குனர் பொன்னுசாமி நடேசன் அறிக்கை: நடப்பு பருவத்தில் சின்ன வெங்காய சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. விதைகளை வாங்கி நாற்றங்கால் விட்டு, நாற்றுகள் பயிர் செய்யப்பட உள்ளன.
விதை வாங்கும்போது பையில் விபர அட்டை, விற்பனை பட்டியல், விற்பனையாளர் கையொப்பத்தை சரிபார்க்க வேண்டும்.விதை சான்று துறை உரிமம் பெற்ற விற்பனையாளரிடம் விதைகளை வாங்குவதுடன், மொத்த விதை பாக்கெட்டை உடைத்தோ அல்லது பாக்கெட் இல்லாமல் சில்லரையாகவோ வாங்கக்கூடாது. விபர அட்டையில், வரிசை எண், விதை பெயர், ரகம், முளைப்பு திறன், இனத்தூய்மை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
விவசாயிகள் நல்ல விதைகளை வாங்கி, நடவு செய்வதன் மூலம் அதிக விளைச்சல் பெறலாம். சின்ன வெங்காய உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விதை சட்டத்துக்கு உட்பட்டு விற்பனை மேற்கொள்ள வேண்டும். விற்பனையாளர்கள், விதை வாங்கியதற்கான "இன்வாய்ஸ்' வைத்திருக்க வேண்டும்.
இருப்பு பதிவேடு பராமரித்து சில்லறை விற்பனை மேற்கொள்ளக்கூடாது. முளைப்பு திறன் பாதிக்காதவாறு விதையை சேமித்து வைக்க வேண்டும். பூச்சி, நோய் மருந்து மற்றும் களைகொல்லிகளை விதைகளுக்கு அருகில் வைக்கக்கூடாது. விதை இருப்பு பதிவேட்டுடன் ஒத்திருக்க வேண்டும்.
விற்பனை நிலையம் முன் இருப்பு பலகை வைத்து, அன்றாட இருப்பை கட்டாயம் குறித்து வைக்க வேண்டும். இந்நடைமுறைகளை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது,விதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யானை நடமாட்டம் அதிகமுள்ள இந்த கிராமத்தில் 15 குடும்பங்களில் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி எதுவுமின்றி இயற்கையோடு அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வனத்தை நேசித்து பழகிப்போன மக்களுக்கு வன விலங்குகளை பார்த்தும் பயம் கிடையாது. 70க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரியாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் இன்று செயற்கை ரசாயன உரங்களை கொண்டு பயிரிடுகின்றனர். ஆனால், இந்த கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்கின்றனர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகம் போன்ற சில பசுமை அமைப்புகளும் ஊர் ஊராய் சென்று இயற்கை விவசாயத்தை பறைசாற்றி வருகின்றனர்.
ராமரணை கிராமம் மழை வளம் அதிகமுள்ள கிராமம். மானாவாரி விவசாயம் இங்கு செழிப்போடு உள்ளது. இப்பகுதி மக்களின் விவசாய முறையே வித்தியாசப்பட்டது; வனத்தில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகள் மேலும் கால்நடை கழிவுகள் முதலியவற்றை கொண்டு உரம் தயாரித்து பயன்படுத்துகின்றனர். பீன்ஸ், ராகி, எள் போன்றவற்றை பயிரிடுகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஈரோடு, திருப்பூர், கோத்தகிரி பசுமை அங்காடிகளில் விற்பனை செய்கின்றனர். இயற்கை முறையில் விளைவித்த பொருட்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது.
ராமரணையை சேர்ந்த ராமன் கூறியதாவது: பல ஆண்டுகளாக நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். கண்ட கண்ட ரசாயன உரம் போட்டு மண்ணை பாழ்படுத்த விரும்ப மாட்டோம். இயற்கை விவசாயத்திலேயே எல்லாம் கிடைக்கும் போது எதுக்கு செயற்கை. சுடர் நிறுவனம் மூலம் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி நடந்தது. இப்போது நாங்களே மண்புழு உரம் உற்பத்தி செஞ்சுக்கறோம்; நல்ல விளைச்சல், நல்ல விலை இரண்டுமே கிடைக்குது. காட்டுக்குள்ளே இயற்கையோட ஒன்றி வாழ்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்
அவர் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோஜா, சம்பங்கி, மல்லிகை, வாடாமல்லி போன்ற மலர் செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான மண்புழு உரம், ரசாயன உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மலர் செடி சாகுபடியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையை தோட்டக்கலைத்துறை துவக்கியுள்ளது. மலர் செடி சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு இதற்கான முழு தொகையும் மானியமாக வழங்க தோட்டக்கலைத்துறை தயாராக உள்ளது. எனவே, மலர் செடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மற்றும் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுடைய நிலத்துக்கான கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல் மற்றும் ரேஷன் கார்டு நகல், இரண்டு ஃபோட்டோ ஆகியவற்றுடன் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம்.
தென்னையில் நிலையான வருவாய் கிடைப்பதால், சொட்டு நீர் பாசனம் அமைப்பது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக உள்ளது. அரசு மானியம் கொடுத்தும் மஞ்சள், வாழை, மரவள்ளி, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதில் ஆர்வமின்றி இருந்தனர். சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணி மந்தமடைய பண தட்டுப்பாடே முக்கிய காரணம். தற்போது மானியம் போக மீதமுள்ள தொகையை, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று, பாசன சபை தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். கடன் அறிவிப்பால், சான்று பெற வி.ஏ.ஓ., அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வங்கி கடன் அறிவிப்பால் ஏராளமான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர். விவசாயிகள் சொந்தமாக சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிலங்களில், 12 மி.மீ., முதல் 16 மி.மீ., வரை குழாய்கள் அமைத்துள்ளனர்.
இவற்றில் தண்ணீர் செல்வதில் எந்த பிரச்னையும் இருப்பதில்லை. மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்த விவசாயிகளுக்கு, சொட்டு சொட்டாக விழும் வகையில் பாசன குழாய் அமைக்குமாறு நிபந்தனை விதிக்கப்படுகிறது. கிணறுகளில் மூன்றில் ஒரு பங்கு உப்பு தண்ணீராக உள்ளது. நீர் மட்டம் மேலே இருக்கும்போது பிரச்னை வருவதில்லை. கீழே செல்ல செல்ல தண்ணீரில் உப்பு அளவு அதிகரிக்கிறது. இந்த தண்ணீர் குழாய்களில் செல்லும்போது உப்பு படிந்து அடைப்பு ஏற்பட்டு; தண்ணீர் செல்வது தடைபடுகிறது. இதனால், பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி இழப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: குறிப்பிட்ட கம்பெனியில் பொருட்களை வாங்கினால் மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது.
எங்கள் விருப்பம் போல் சொட்டு நீர் பாசனம் அமைக்க முடிவதில்லை. அதிகாரிகள், கம்பெனிக்காரர்கள் சொல்லும் முறையில் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டியுள்ளது. அவ்வாறு அமைக்கும் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. நல்ல தண்ணீர் இருக்கும் பகுதிகளில் பிரச்னை இருப்பதில்லை. உப்பு தண்ணீர் உள்ள கிணறுகளில் பாசனம் செய்பவர்களுக்கு துல்லிய பண்ணைய திட்டம் பெரும் பிரச்னையாக உள்ளது.
உப்பு தண்ணீர் உள்ள பகுதிகளில் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதன் மூலமும், விவசாயிகளே தங்கள் விருப்பம் போல் சொட்டு நீர் பாசனம் அமைக்கவும் அனுமதிக்க வேண்டும், என்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வால்பாறை, நீராறு, சோலையாறு பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இரண்டு மாதம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. அதன்பின் மழை பொழிவு குறைந்ததால், நீர்மட்டம் உயர்வது தடைப்பட்டது. கடந்த வாரம் வால்பாறை, சோலையாறு, நீராறு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணைகளின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இதில், ஆழியாறு அணைக்கு மேல் ஆழியாறு அணையிலிருந்து நீர்வரத்துள்ளதால், அணை நிரம்பு நிலையை எட்டியுள்ளது. பரம்பிக்குளம் அணையில் 72 அடி உயரத்தில், 51.66 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,296 கனஅடி தண்ணீர் வரத்தும், அணையில் இருந்து 1,105 கன அடி நீர் வெளியேற்றமாகிறது.
ஆழியாறு அணையில் 120 அடி உயரத்தில், 119.50 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 375 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. மேல் ஆழியாறு அணையிலிருந்து 278 கன அடி தண்ணீர் வரத்தாகவுள்ளது. அணையில் இருந்து 293 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில், ஆழியாறு அணையில் இருந்து ஆற்றில் 186 கனஅடியும், ஸ்பில்வே வழியாக ஆற்றில் 107 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையின் 60 அடி உயரத்தில் 36.94 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 632 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், 1,246 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது. அமராவதி அணையின் 90 அடி உயரத்தில் 48.24 அடி நீர்மட்டம் உள்ளது. அணையிலிருந்து 1,145 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகிறது. பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், "மழை பொழிவு குறைந்து விட்ட நிலையில், ஆழியாறு அணைக்கு நீர்வரத்துள்ளதால், ஓரிரு நாட்களில் நிரம்பும் வாய்ப்புள்ளது.
இன்னும் 0.30 அடி நீர்மட்டம் உயர்ந்தால், அனைத்து மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறந்துவிடப்படும். அணைக்கு தொடர்ந்து நீர் வரத்துள்ளதால், எந்நேரமும் நிரம்பும் வாய்ப்புள்ளது. பி.ஏ.பி., திட்டத்திற்குட்பட்ட மற்ற அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், எதிர்பாராதபடி மழை பெய்து அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்தால் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் நிரம்பி தண்ணீர் வீணாகும்' என்றனர். வால்பாறை: வால்பாறையில் பருவ மழை மீண்டும் குறைந்துள்ள நிலையில் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 145 அடியாக உயர்ந்தது.
கடந்த இரண்டு நாட்களாக வால்பாறையில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து வெயில் நிலவுகிறது. மழைப்பொழிவு குறைந்த நிலையில்160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 145 அடியாக உயர்ந்தது. அணை நிரம்ப 15 அடி நீர்மட்டமே உள்ளது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 70 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மானாம்பள்ளி பவர் ஹவுஸ் வழியாக பரம்பிக் குளத்திற்கு விநாடிக்கு 812 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மீதமுள்ள நான்கு சூளைகளில் இரண்டு சூளைகள் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இரண்டு சூளைகள் மட்டுமே உள்ளதால் போதிய அளவு சுண்ணாம்பு பவுடர் பல்லடம் பகுதியில் உள்ள கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு கிடைக்கவில்லை. பல்லடத்தில் சுண்ணாம்பு பவுடர் தட்டுப்பாடு காரணமாக, காங்கயம் மற்றும் உடுமலை பகுதிகளில் உள்ள சூளைகளில் சுண்ணாம்பு பவுடரை பண்ணையாளர்கள் வாங்கி வருகின்றனர். பல்லடத்தில் ரூ.70 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு பெட்டி சுண்ணாம்பு பவுடர், காங்கயம், உடுமலை பகுதிகளில் ரூ.90க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. மூடப்பட்டுள்ள சூளைகளில் இரண்டு சூளைகளாவது மீண்டும் உடனடியாக திறக்கப்பட்டால் மட்டுமே பல்லடத்தில் சுண்ணாம்பு தட்டுப்பாடு நீங்கும்.

கடந்த வாரம் இட ஒதுக்கீட்டில் 40 சதம் அறிவிக்கக்கோரி உஸ்மானியா பல்கலை.,யில் புகுந்து தேர்வு எழுதிய மாணவர்களை விரட்டினர். இந்நிலையில் தெலுங்கானா பகுதி விவசாயிகள் தங்களுக்கு உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்தாக பேராராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகைல் நாயுடு நேரிடையாக சென்று விசாரிக்க திட்டமிட்டிருந்தார். ரங்காரெட்டி மாவட்டம் பார்கி பகுதியில் நாயுடுவின் கட்சி எம்.எல்.ஏ., ஹரீஸ்வார்ரெட்டி வீட்டில் உணவு அருந்தி கிளம்பும் போது இந்த நேரத்தில் வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதில் பாதுகாப்பு படையினரின் வாகனம் கல்வீச்சில் தேசமுற்றது. நாயுடுவின் கார் டிரைவர் சாதுர்யமாக வேகமாக எடுத்து சென்றதால் நாயுடு எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். இந்தக்காட்சியை படம் பிடித்த டி.வி., காமிராமேன் ஒருவர்தாக்கப்பட்டார். தொடர்ந்து வன்முறைக்காரர்களுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே கல்வீச்சு நடந்தது.
இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி வன்முறைக்கும்பலை விரட்டி அடித்தனர். தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த அரசியல் கட்சி பிரமுகர்களும் தெலுங்கானா பகுதிக்குள் நுழையக்கூடாது என ஏற்கனவே தெலுங்கானா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த மிரட்டலையும் மீறி நாயுடு அங்கு இன்று செல்ல திட்டமிட்டிருந்தார்.
இத்திட்டத்திற்கு கூலி உயர்ந்துள்ளதால், கிராமப்புறங்களில் விவசாய தொழிலுக்கான கூலிகள் உயர்ந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், பயனாளிகள் அதிகளவில் சேர்க்கும் முயற்சி நடக்கிறது. ஏற்கனவே, 100 நாட்கள் வேலை செய்த பயனாளிகளை கொண்டு மகளிர் சுயஉதவிக்குழு அமைக்கும் பணி நடக்கிறது. கிராமப்புறங்களிலுள்ள மக்களிடம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சேரும் ஆர்வம் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி தாலுகாவிலுள்ள ஊராட்சிகளில், மக்கள் அதிகமுள்ள ஊராட்சிகளில், 200 பயனாளிகள் வரையும், குறைந்த அளவு மக்கள் தொகையுள்ள ஊராட்சிகளில் 150 பயனாளிகளையும் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. பெரும்பாலான ஊராட்சிகளில் சராசரியாக 130 பயனாளிகள் வரை பணியாற்றுகின்றனர்.
இதனால், விவசாய கூலி தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைகொம்பாகியுள்ளது. கேரள எல்லையோர கிராமங்களில், கூலியாட்கள் பற்றாக்குறையாக உள்ளதால், கேரளப்பகுதிகளிலிருந்தும், வட மாநிலங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பணிகள் மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. வெளி மாநில ஆட்களை அழைத்து வரும் போது, தற்போது வழங்கும் கூலியை விட கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகள் துரிதப்படுத்த பயனாளிகள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சராசரியாக 500 முதல் 900 பயனாளிகள் வரை சேர்ந்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள பெரிய அளவிலான ஊராட்சிகளில் 110 பயனாளிகளும், குறைந்த மக்கள் சிறிய ஊராட்சிகளில், 90 பயனாளிகள் வரையும் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கூறியதாவது: உள்ளூரில், விவசாய கூலி தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகியுள்ளது. கிடைக்கும் ஆட்களை கொண்டு பணி மேற்கொண்டாலும், கூலி அதிகரித்துள்ளதால் சிரமம் ஏற்படுகிறது. வட மாநிலங்களிலிருந்தும், கேரள மாநிலங்களிலிருந்தும் குடும்பம், குடும்பமாக ஆட்களை அழைத்து வந்து பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், கூடுதல் செலவு ஏற்படுகிறது. விளைச்சலுக்கு ஏற்ப விலை கிடைக்காத நிலையில், கிடைக்கும் வருவாயில், பெருந்தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
இந்நிலையில், பயிர்கடன் பெற கூட்டுறவு சங்கங்களில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். விண்ணப்பத்துடன் விளைநிலத்தின் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை செய்த முடிவுகளை இணைக்க வேண்டும். கிராமப்பகுதியில் இவ்வகை பரிசோதனைகளை செய்ய எவ்வித வசதியும் இல்லை. இதனால், விவசாயிகள் பரிசோதனைக்காக அலைய வேண்டிய நிலை ஏற்
பட்டுள்ளது. பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்திய பின்னர் இத்திட்டத்தை கட்டாயப்படுத்தலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குழப்பம் ஏற்படுத்தும் காப்பீட்டு திட்டம்: இந்தாண்டு தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து பயிர்களையும் காப்பீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்கடன் பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு திட்டம் ட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தால் கிடைக்கும் பலன்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏழு வட்டாரங்களுக்கு வானிலை சார்ந்த பயிர்க்காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தில், சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு பிடித்தம் செய்யப்படும் பிரிமீயம் தொகை ஒராண்டு வட்டிக்கு இணையாக உள்ளது. இவ்வாறு, அதிக தொகை பயிர்க்கடனில் பிடித்தம் செய்யப்படும் நிலையில் இந்த திட்டத்தால் முழுமையான பலன் கிடைக்குமா என்பது விவசாயிகளிடம் கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.உதாரணமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் மக்காச்சோள சாகுபடிக்கு 7 ஆயிரம் ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இதில், ஏக்கருக்கு 276 ரூபாய் காப்பீடு பிரிமீயமாக பிடித்தம் செய்யப்படுகிறது. பருத்தி சாகுபடி ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் கடனாகவும், 826 ரூபாய் பிரிமீயமாகவும் பிடித்தம் செய்யப்படுகிறது. பருத்திக்காக பயிர்கடன் பெறும் விவசாயி ஒராண்டில் கடன் தொகையை செலுத்த முடியாவிட்டால் அவருக்கு 840 ரூபாய் வட்டியாக கணக்கிடப்படும். இதற்கு இணையாக காப்பீடு பிரிமியம் தொகை 826 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. கட்டாயப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளார். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பல்வேறு திட்டங்களின் கீழ் காப்பீடு செய்யும் நிலையில் பயிர்கள் பாதிக்கப்படும் போது நிவாரணம் கிடைப்பதில்லை. வருவாய் உள்வட்டம் முழுவதும் பயிர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே குறைந்தளவு நிவாரணம் கிடைக்கிறது.
தற்போதைய காப்பீட்டு திட்டத்தில் நிவாரணம் கிடைப்பதற்காக நடைமுறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கணிசமான தொகை பிடித்தம் செய்யப்படுவதால், செலவினங்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. அரசு இது குறித்து பரிசீலனை செய்து பயிர்கடன் பெற விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்', என்றனர்.புலம்பும் அலுவலர்கள்தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அலுவலர்கள் காப்பீட்டு திட்டத்திற்காக கடன் தொகையில் பிடித்தம் செய்யப்படுவதை விளக்கினாலும் விவசாயிகள் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால், அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இரண்டு தரப்பிலும் சிக்கும் அலுவலர்கள் தங்கள் பிரச்னை குறித்து புலம்பி வருகின்றனர்.
1,197 கறிக்கோழி பண்ணைகளில் 63.9 லட்சம் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பெருந்துறை, ஈரோடு பகுதியில் முட்டை கோழி பண்ணைகளும், காங்கேயம், தாராபுரம், மூலனூர் பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகளும் அதிகளவில் உள்ளன. முன்பெல்லாம் கிராமபுறத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு அதிகமிருந்தது.
வீட்டுக்கு பத்து முதல் 15 கோழிகள் வளர்க்கப்பட்டன. இந்த கோழிகள் பெரும்பாலும் வேளாண் நிலத்தில் கிடக்கும் தானியங்கள், புழு, பூச்சிகளை உண்டு வாழ்ந்தன. ஆண்டுக்கு 60 முட்டைகள் வரை உற்பத்தி செய்தன. இப்போது பிராய்லர் கோழிகளைப் போல், நாட்டுக் கோழிகள் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 13க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி பண்ணைகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உள்ளன.
இங்குள்ள பண்ணைகளில் தாய்க்கோழி மூலம் மூட்டைகள் மற்றும் குஞ்சுகள் (சிட்ஸ்) உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டைக்காக வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு இரண்டு சதுர அடியிடம் போதுமானது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிக்கு ஒரு சதுரஅடி இடம் போதுமானது. பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி இறைச்சியில் சுவை அதிகம். நாட்டுக்கோழிக்கு தீவனச் செலவும் குறைவுதான். நாட்டுக்கோழிகள் "வெள்ளை கழிச்சல்' நோயால் மட்டுமே அதிகம் பாதிக்கப்படும். அவற்றை தடுக்க மாவட்ட கால்நடை மருத்துவமனையில் பிரதிவாரம் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் டாக்டர் தனசீலன் கூறியதாவது: நாட்டுக்கோழிகளை இருமுறையில் வளர்க்கலாம். ஒன்று தரையில் உமி போட்டு வளர்க்கலாம். மற்றொன்று கூண்டுக்குள் வளர்க்கலாம்.
நாட்டுக்கோழிக்கு சாதாரணமாக சமச்சீர் உணவு கொடுத்து வளர்த்தால் ஐந்து மாதத்தில் 1.300 கிலோ முதல் 1.400 கிலோ வரை எடை கிடைக்கும்.
உணவு தேட ஒரு கோழி நாள் முழுக்க காடு, மேடு என அலைந்து திரிந்து தனது சக்தியை விரயம் செய்ய வேண்டி வரும். ஆனால், பண்ணையில் வளர்க்கும் நாட்டுக் கோழிகள் அப்படியல்ல; தேவையான அளவு சமச்சீர் உணவு கொடுத்து பராமரித்தால் மூன்று மாதத்தில் அதே எடைக்கு வந்து விடும். நல்ல விலையும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
குடிசைத் தொழில் போல் நடந்துவரும் சுண்ணாம்புத் தொழிலை பாரம்பரியமாக சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். சுண்ணாம்புக் கல்லை வெட்டி எடுத்து, காய்ந்த பனை மர குருத்துகள், கோந்தைகள், விறகுகளை வைத்து சூடுபடுத்தி சுண்ணாம்பு தயார் செய்கின்றனர்.
சுண்ணாம்பு தயாரிக்க ஆகும் செலவுகளை கணக்கிட்டால் மிக குறைந்த தொகைதான் கூலியாகக் கிடைக்கிறது. இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்க்கையோடு போராடி வருகின்றனர்.
வைப்புத்தொகை செலுத்தி அனுமதி பெற்ற பிறகே சுண்ணாம்புக் கல்லை வெட்டி எடுக்க முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. வயிற்றுப் பிழைப்புக்கே வழியில்லாமல் பரிதவித்து வரும் இத்தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வைப்புத்தொகை செலுத்த வழியில்லாததால், ஏற்கெனவே அனுமதி பெற்றவர்களிடம், சுண்ணாம்புக் கல்லை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
கல்லை விலை கொடுத்து வாங்கித் தொழில் செய்வதால், தொழிலில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெறவே போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் காள வாசல்களை மூடிவிட்டு, கூலித் தொழிலில் ஈடுபடும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. வரும் காலங்களில் இந்த அளவு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுண்ணாம்புக் கட்டிகளை வெட்டி எடுக்கவோ, இத்தொழிலை மேம்படுத்தவோ அரசு எவ்வித மானியமோ, உதவியோ செய்வதில்லை. பெரும்பாலான இடங்களில் கண்மாய்களில் காளவாசல்களை அமைத்து, சுண்ணாம்பு உற்பத்தி செய்கின்றனர்.
மழைக் காலங்களில் கண்மாய்க்குள் தண்ணீர் வந்துவிடுவதால், மூன்று மாதங்கள் வேலையின்றி சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது விலைவாசி உயர்வால் குறைந்த வருமானமே கிடைக்கும் இத்தொழிலில் குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. சுண்ணாம்பு தயாரிக்கும்போது தீக்காயங்கள் ஏற்பட்டு பாதிக்கப்படும் அபாய நிலையும் உள்ளது.
வீடுகள் பொழிவு பெற சுண்ணாம்பு தயாரித்து கொடுக்கும் இத்தொழிலாளர்களின் வாழ்க்கை படிப்படியாக இருண்டு கொண்டிருக்கிறது.
இத்தொழிலை சீரமைத்து, இத்தொழிலாளர்களின் வாழ்க்கை சிறப்படைய தனி நல வாரியம் அமைக்க அரசு முன் வர வேண்டும் என்பதே வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.
மணப்பாறை நகரின் பிரதான பகுதிகளில் பேருந்து நிலையம், பயணியர் விடுதி, நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் என அரசுத் துறை அலுவலகங்களாகவே உள்ளன. நகர்ப் பகுதியில் தனி நபர் இடம் மிகக் குறைவாகவே உள்ளது.
இதனால், தரைக் கடைகளும், தள்ளுவண்டிக் கடைகளும் நிறைய உள்ளன. மேலும், சாலையோரங்களை ஆக்கிரமிக்கும் திடீர் கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை இரு வேளைகளிலும் பள்ளி மாணவர்கள்கூட சாலையைக் கடக்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் எதிரில், பயணியர் விடுதியின் அருகே 1.5 ஏக்கர் அரசு நிலம் எந்தவித பயன்பாடும் இன்றி புல், புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த நிலம் மருங்காபுரி ஜமீனுக்குச் சொந்தமானது. இதில் சரசுவதி வாசகசாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருந்தது.
நாளடைவில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கேளிக்கை விளையாட்டுகள் விளையாட தனிநபர்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தின் மூலம் இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. பிறகு, கையகப்படுத்தப்பட்ட இடத்தில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகமும், வருவாய் ஆய்வாளர் அலுவலகமும் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், அந்த அலுவலகங்கள் இடம் மாற்றப்பட்டன. இதனால், முறையான பராமரிப்பின்றி அந்த வளாகத்தில் நல்ல நிலையில் இருந்த கட்டடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுதவிர, அந்த வளாகம் முழுவதும் முள் செடிகள் சூழ்ந்து, விஷ ஜந்துகள் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. மேலும், குப்பைகளும், உணவகக் கழிவுகளும் கொட்டப்பட்டு, பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவித்து வருகிறது இந்த இடம். இந்த இடத்தை வருவாய்த் துறையினரிடமிருந்து பெற்று, வணிக வளாகம், திருமண மண்டபம் கட்ட நகராட்சி நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. ஆனால், வருவாய்த் துறை உயர் அலுவலர்கள் இந்த இடத்தை நகராட்சிக்குத் தருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சித் துறை அமைச்சகத்தின் மூலம் பல முறை முயன்றும் இந்த இடம் நகராட்சிக்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்த இடத்தை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த இடத்தில் வணிக வளாகம் கட்டி, சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைக்காரர்களுக்கு குறைந்த வாடகைக்கு கொடுப்பதன் மூலம், நகராட்சிக்கு வருமானம் கிடைப்பதோடு, போக்குவரத்து நெரிசல், பொது சுகாதாரக் குறைபாடுகள் குறையும் எனக் கருதப்படுகிறது.
கிராமப்புறங்களில் 16 ஆயிரம் என்பது 40 ஆயிரமாகவும், நகர்ப்புறங்களில் 24 ஆயிரம் என்பது 60 ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இலவச வீட்டு மனைகள், தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் போன்றவற்றை வழங்கும் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன்பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு 12 ஆயிரம் என்றிருந்தது. 2000-ல் இந்தத் தொகை கிராமப்புறங்களில் 16 ஆயிரம் என்றும், நகர்ப்புறங்களில் 24 ஆயிரம் என்றும் உயர்த்தப்பட்டது. அதன்படி, பயனாளிகளுக்கு வீட்டுமனைகளும், தையல் இயந்திரங்களும், சலவைப் பெட்டிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
வருமான வரம்பு உயர்வு: இந்தத் திட்டத்தின்கீழ், அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் பயன்பெறக் கூடிய வகையில், வருமான உச்சவரம்பை மேலும் உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இலவசமாக வழங்கி வரும் வீட்டுமனைகள், தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ஆகியவற்றைப் பெறுவதற்குப் பயனாளிகளின் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் இப்போதுள்ள 16 ஆயிரம் என்பது 40 ஆயிரமாகவும், நகர்ப்புறங்களில் இப்போதுள்ள 24 ஆயிரம் என்பது 60 ஆயிரமாகவும் உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
யார் யாருக்கு திட்டங்கள்: இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டிகள் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களைப் பெற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மாவட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
தையல் இயந்திரம் பெற வேண்டுமெனில், தையல் கலை தெரிந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்களுக்கு மட்டுமே சலவைப் பெட்டிகள் அளிக்கப்படும். வீடோ அல்லது வீட்டு மனையோ வைத்திருக்காத பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது.

ஒசூர்: ஒசூரில் அந்திவாடி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் டன் நெல் மூட்டைகள், மழையிலும், வெயிலிலும் சேதமடைந்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதம்தோறும் 15 ஆயிரம் டன் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் வாங்கி உள்ளூரில் அரவை செய்து அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு வாணிபக் கழகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு ரேஷன் அரிசிக்காக அதிக அளவில் நெல் கொள்முதல் செய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் நியாயவிலை கடைகளுக்கு அனுப்ப வேண்டிய ரேஷன் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அங்கு போதிய இடவசதி இல்லாததால், புதியதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கு வைக்க முடியவில்லை.இந்நிலையில், ஒசூர் தளி சாலையில் உள்ள அந்திவாடி திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் டன் நெல் மூட்டைகள் டெல்டா பகுதியில் இருந்து வாங்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, தளி, ஒசூர், வேப்பனப்பள்ளி, பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 21 தனியார் அரிசி ஆலைகள் மூலம் அரவை செய்து ரேஷன் கடைகளுக்கான அரிசி அனுப்பப்படுகிறது.
திறந்தவெளியில் சேமிக்கப்பட்டு வரும் நெல் மூட்டைகள் பெயரளவில் பிளாஸ்டிக் தார்பாய்கள் மூலம் மூடப்பட்டுள்ளன. இவை பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது சேதமடைந்து, நெல் மூட்டைகள் நனைந்து விடுகின்றன. அப்படி நனைந்துவிடும் நெல் பல நேரங்களில் முளைக்கட்டி விடுகிறது. இதுகுறித்து வாணிபக் கிடங்கு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கூறியது:
இம்மாவட்டத்துக்கு மாதத்துக்கு 15 ஆயிரம் டன் ரேஷன் அரிசி தேவை. அதிக எண்ணிக்கையிலான நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு போதுமான கிடங்கு வசதி இங்கே இல்லை. இதனால் அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் அடுக்கி வைக்கப்படுகின்றன. தற்போது 1 லட்சம் டன் நெல் மூட்டைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
நிலக்கடலை வேர் முடிச்சுகளை உருவாக்கும் பயிராதலால் ரைசோபியம் உயிர் உரத்தை விதை நேர்த்தி செய்தும், வயலில் இட்டும், தழைச் சத்தை மிச்சப்படுத்தலாம். வேளாண்மை துறையால் வழங்கப்படும் நுண்ணுர கலவை ஏக்கருக்கு 5 கிலோ இடுவதால் பயிர் செழிப்புடன் வளர்ந்து அதிக மகசூல் அளிக்கும் என்றார்.தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ்சேகர் வரவேற்றார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் துரைப்பாண்டியன் பேசும் போது, நிலக்கடலையில் திரட்சியான கடலை கிடைக்க ஜிப்சம் ஏக்கருக்கு 160 கிலோ என்ற அளவில் இட வேண்டும் என்றார்.
விதை சான்று உதவி இயக்குநர் பிரமநாயகம், விதை சான்று அலுவலர் அசோகன் எண்ணெய் வித்துகளில் விதை உற்பத்தி பற்றி பயிற்சி அளித்தனர். வேளாண்மை அலுவலர் உதயகுமார் நிலக்கடலையில் உரக்கலவை கரைசல் தெளிக்கும் முறை குறித்து விளக்கினார். துணை வேளாண்மை அலுவலர் லட்சுமி நாராயணன் பாலிதீன் விரிப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யும் உத்தி குறித்து பேசினார்.விவசாயிகளுக்கு எண்ணெய் வித்துகள் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்களை விளக்கும் கருத்து காட்சி நடந்தது. ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் சபரிராஜன், நாகராஜன், பரமசிவன், மாரியப்பன், அன்சர் அலி, குமார் செய்திருந்தனர்.
பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் 45 எம்எல்ஏக்களின் பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் பேரவையில் பாஜகவுக்கு 18 உறுப்பினர்கள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். இதன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2, அகில ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துக்கு 5 பேர் உள்ளனர், இந்த கூட்டணிக்கு சுயேச்சை எம்எல்ஏக்களான சாம்ரா லிண்டா, விதேஷ் சிங் ஆகியோரும் ஆதரவாக உள்ளனர். இந்த 45 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முண்டா, ரகுவர் தாஸ், அகில ஜார்க்கண்ட் மாணவர் சங்கத் தலைவர் சுதேஷ் மகதோ, சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்தவர்களில் அடங்குவர்.
முன்னதாக, பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவித்ததையடுத்து, பாஜக தரப்பில் புதிய முதல்வராக பதவி ஏற்க ஏதுவாக முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான அர்ஜுன் முண்டா பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதற்காக, பாஜக தலைவர் நிதின் கட்கரி உத்தரவின்பேரில் அந்த பதவியிலிருந்து விலகினார் ரகுவர் தாஸ்.
82 உறுப்பினர்களைக் கொண்டது ஜார்க்கண்ட் சட்டப்பேரவை. 2009 டிசம்பரில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-பாஜக கூட்டணி அரசு அமைந்தது. முதல்வராக சிபு சோரன் பதவியேற்றார்.
ஏப்ரலில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பாஜக, இடதுசாரிகள் கொண்டுவந்த வெட்டுத் தீர்மானத்தின் மீது மத்திய அரசுக்கு ஆதரவாக சிபு சோரன் வாக்களிக்கவே பாஜக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இடையே மோதல் எழுந்தது. ஆதரவை விலக்கிக் கொள்வோம் என பாஜக மிரட்டி வந்தது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவுடன் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது சுழற்சி முறையில் ஆட்சியை பகிர்ந்து கொள்ளலாம் என முதலில் ஒப்புக்கொண்ட சிபுசோரன் பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார்.
இதையடுத்து பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. மே 30ம் தேதி பதவி விலகினார் சிபுசோரன். ஜூன் 1 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது ஜார்க்கண்ட்.
மாநில சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்எல்ஏக்கள், அதன் கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஆங்கிலோ இந்தியர் வகுப்பு நியமன உறுப்பினர் இறந்துவிட்டதால் ஒரு இடம் காலியாக உள்ளது. எனவே இப்போது 81 பேர் பேரவையில் இடம்பெற்றுள்ளனர்.
குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய ஆளுநர் அறிக்கை: இந்நிலையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய பரிந்துரைத்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
தடையாக இருக்க மாட்டோம்: மத்திய அரசு
ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு தடையாக இருக்கமாட்டோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்துள்ளது.
பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது தொடர்பாக ஆளுநர் அறிக்கை கொடுத்ததும் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டின் இப்போதைய பரபரப்பு அரசியல் நிலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரித்தார் ஆளுநர் பரூக். 45 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது எந்த அளவுக்கு உண்மை என்பது உறுதி செய்யப்படும் என்று சிதம்பரத்திடம் பரூக் கூறியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் விவரித்தார் உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. கடந்த ஜூன் மாதம் கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்நிலையில், தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பல் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை, தமிழக கவர்னர் நேற்று பிறப்பித்தார்.
இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறியிருப்பதாவது: அரசுத் துறை, சட்டசபை மற்றும் அரசு சார்ந்த துறைகளில், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பணியிடங்களில், நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது, 20 சதவீத பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விபரம்: தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது.
கல்வராயன்மலை, பச்சமலை, கொல்லிமலை உள்ளிட்ட மலைகளில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இதேவேளையில் மூட்டைக்கு 750 ரூபாய் வரை கிடைத்தது. அதேபோல் ஸ்டார்ச் மூட்டை 3,000 ரூபாய், ஜவ்வரிசி மூட்டை 5,000 ரூபாய் என விலை கிடைத்து வந்தது.
தாய்லாந்தில் இருந்து மூன்று லட்சம் மூட்டை ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கள்ளிபூச்சி நோய் தாக்குதலால் அங்கு மரவள்ளி உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் விலை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், மரவள்ளி விலையோ மூட்டைக்கு 350 ரூபாய் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்டார்ச் மூட்டைக்கு 2,000 ரூபாய், ஜவ்வரிசி மூட்டைக்கு 3,000 ரூபாய் என குறைந்துள்ளது.
ஒரு பக்கம் மரவள்ளி மகசூல் குறைவு, இன்னொரு பக்கம் மழை இல்லாதது, புரோக்கர்களின் தில்லு முல்லு, பாய்ன்ட் பார்ப்பதிலும், எடை போடுவதிலும் மோசடி நடக்கிறது. அதையும் தாண்டிவந்தால் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசிக்கு விலையில்லை என மரவள்ளி கொள்முதல் தடுக்கப்படுகிறது.
சிறு, குறு, நடுத்தர ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்களை கேட்டால், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களும், வியாபாரிகளும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஜவ்வரிசி, ஸ்டார்ச் விலையை குறைத்து வருகிறார்கள் என்கின்றனர்.
மாவுப்பூச்சி நோய் பரவி வருவதால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர். விலை பிரச்னை ஒருபுறம், நோய் தாக்குதல் மறுபுறம் என்றிருந்தால் விவசாயிகள், ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர். மரவள்ளி விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைப்பகுதி கிழங்குகள் 90 சதவீதம் அறுவடையாகியும், தரைபகுதி கிழங்குகள் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு வர உள்ளது. சென்ற ஆண்டு கிடைத்த விலைக்கு குறையாமல் அதாவது மூட்டைக்கு 750 ரூபாய்க்கு குறையாமல் கொள்முதல் விலை கிடைக்க வேண்டும்.
ஆண்டுதோறும் மத்திய அரசு மரவள்ளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பரவி வரும் மாவுப்பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். இடைத்தரகர்களின் கொள்ளையை தடுக்க வேண்டும். அரசு சார்பாக வாகன ஏற்பாடு, பாயின்ட் மிஷின் மற்றும் எடைமேடை அமைத்து தர வேண்டும். சேலம் சேகோசர்வ் மூலம் மட்டுமே ஜவ்வரிசி விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும். ஆலை அதிபர்கள், வியாபாரிகள் வரி செலுத்தாமல் செய்யும் ஜவ்வரிசி வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்